காதலிக்கு எஸ்எம்எஸ் அனுப்பிய காதலன் – அடுத்த நடந்த சோகம்

சென்னையில் காதலிக்கு எஸ்எம்எஸ் அனுப்பியதால் பதற்றமடைந்த அவள், உயிரை மாய்த்துக் கொண்டாள்.

சென்னை கிருஷ்ணமூர்த்தி நகரைச் சேர்ந்த ரத்னவள்ளி. இவர் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் 12-ம் தேதி கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, எனக்கு இரண்டு மகள்கள். மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது. இரண்டாவது மகளுக்கு 21 வயதாகுகிறது. அவள் பிசிஏ பிடித்து விட்டு எம்.ஆர் நகர் பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றி வந்தார். கடந்த 10-ம் தேதி எங்கள் வீட்டுக்கு ராயபுரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வந்தார்.

அவர், என்னுடைய மகளை காதலிப்பதாகக் கூறினார். அதுகுறித்து என்னுடைய மகளிடம் விசாரித்தபோது அவரும் அந்த இளைஞரை விரும்புவதாகத் தெரிவித்தார். இதையடுத்து வீட்டுக்கு வந்த இளைஞரிடம் என்னுடைய மாமனார் கடந்த 18-ம் தேதி இறந்து விட்டார். அதனால் இப்போது எதுவும் பேச முடியாது என்று கூறினேன். அந்த இளைஞரும் தனக்கு சகோதரிகள் உள்ளனர்.

அவர்களை திருமணம் செய்து கொடுத்துவிட்டு இரண்டு ஆண்டுகள் கழித்து எனது மகளை திருமணம் செய்வதாக கூறிவிட்டு சென்றுவிட்டான். அதன்பிறகு எனது மகளை நாங்கள் வேலைக்கு அனுப்ப வில்லை. மேலும் அவளின் செல்போனையும் நாங்கள் வாங்கி வைத்துக் கொண்டோம். ராயபுரத்தைச் சேர்ந்த இளைஞர், தொடர்ந்து எனது மகளின் செல்போனுக்கு போன் செய்து வந்தார்.

ஆனால் யாரும் போனை எடுக்கவில்லை. இந்தச் சூழலில் அந்த பையன் வேண்டாம் என்று என் மகளும் எங்களிடம் சொல்லிவிட்டார். இந்தநிலையில் எனது மகளின் செல்போனுக்கு நீ போனை எடுக்கவில்லை என்றால் நான் வீட்டுக்கு வருவேன் என்று எஸ்எம்எஸ் அனுப்பியிருந்தான். அதனால் எனது மகள் பதற்றமாகவே இருந்தாள். கடந்த 12-ம் தேதி காலை என்னுடைய கணவர் வேலைக்கு சென்றுவிட்டார்.

நானும் எனது மகளும் வீட்டில் இருந்தோம். இருவரும் சேர்ந்து துணி துவைத்தோம். பிறகு எனது மகள் சாப்பிட வீட்டுக்குள் சென்றாள் நான் துணிகளை காய வைத்டது விட்டு அரை மணி நேரம் கழித்து வீட்டுக்குள் சென்றேன். அப்போது மின்விசிறியில் நைலான் கயிற்றில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தாள். அதைப்பார்த்து நான் அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டேன்.

பிறகு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் உதவியோடு கயிற்றை அறுத்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எனது மகளைக் கொண்டு சென்றோம். அங்குள்ள டாக்டர்கள், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறினர். அதனால் எனது மகளை அங்கு கொண்டு சென்றோம்.

அப்போது எனது மகளை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர். எனவே எனது மகளின் மரணம் குறித்து விசாரணை நடத்தி பிரேத பரிசோதனைக்குப்பிறகு சடலத்தை எங்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அண்டனி ராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *