விவாகரத்தான மனைவியுடன் வாழ வற்புறுத்தியதால் இளைஞர் தற்கொலை

மதுரவாயலில் விவாகரத்தான முதல் மனைவியுடன் மீண்டும் வாழ வற்புறுத்தியதால் இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.


மதுரவாயல், பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பிரித்திவிராஜ் (34). இவர் நேற்று காலை இவரது வீட்டின் வாசலில் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதைக் கண்ட பொதுமக்கள் அவரது உடலில் இருந்த தீயை அணைத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


இது குறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்தன.

பிரித்விராஜ் அம்பத்தூர், பாடியில் தங்கி லேத் பட்டறையில் வேலை செய்து வந்துள்ளார் இவருக்கு சத்யா என்ற பெண்ணுடன் 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டனர்.


வேறொரு பெண்ணுடன் பிரித்விராஜ் திருமணம் செய்யவிருந்த நிலையில் முதல் மனைவி சத்யாவின் சகோதரர்களான தாமு, இளையராஜா ஆகிய 2 பேரும் பிரித்திவிராஜ் அடித்து உதைத்து மகாபலிபுரத்தில் உள்ள வீட்டில் தங்க வைத்து தனது தங்கையுடன் மீண்டும் திருமணம் செய்து கொண்டு வாழ வேண்டும் வற்புறுத்தியுள்ளனர்.


இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்த பிரித்விராஜ் அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் தப்பி வீட்டிற்கு வந்து உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் சிகிச்சை பலனின்றி பிரித்விராஜ் இறந்து போனார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *