திருநின்றவூரில் டிராவல்ஸ் அதிபர் கொலை ஏன்? பரபரப்பு பின்னணி

ஆவடியை அடுத்த திருநின்றவூர் செல்வராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவர் அதே பகுதியில் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். சமூக சேவையிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டு அந்த பகுதியை சார்ந்த சாலமன், தமிழ் ஆகியோருடன் வாக்குவாதம் ஏற்பட்டு திருநின்றவூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவாகியுள்ளது.


இந்த முன்விரோதம் காரணமாக மகேந்திரனுக்கும் மற்றும் அந்த பகுதியை சார்ந்த இளைஞர்களுக்கும் இன்று இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி கைகலப்பாகியுள்ளது ஆத்திரமடைந்த சாலமன்,தமிழ் மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் என 4 பேர் சேர்ந்து மகேந்திரனை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் மகேந்திரன் பலத்த காயமடைந்தார்.


சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த திருநின்றவூர் காவல் துறையினர் உயிருக்கு பேராடிகொண்டிருந்த மகேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் மகேந்திரன் உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து கொலை வழக்காக பதிவு செய்த காவல் துறையினர் தலைமறைவாகவுள்ள தமிழ், சாலமன், அவர்களது நண்பர்களை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *