November 8, 2026
cheque

மும்பை: காசோலை (Cheque) மோசடிகளைத் தடுக்கும் பொருட்டும், பணப் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், 2027 ஜனவரி 1 முதல் புதிய காசோலை பயன்பாட்டு விதிகள் நாடு முழுவதும் கட்டாயமாக்கப்படுவதாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்துள்ளது.

புதிய விதிமுறைகளின் முக்கிய அம்சங்கள்:

  • ரூ.50,000 மற்றும் அதற்கு மேற்பட்ட தொகைகள்: தனித்துவமான குறியீட்டு எண்கள் மற்றும் பாதுகாப்புக் குறியீடுகள் கொண்ட புதிய காசோலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
  • புற ஊதாக் கதிர் (UV) பாதுகாப்பு: வங்கிக் கணக்கு எண்ணுக்குக் கீழே பிரத்யேக UV ஒளி மூலம் மட்டுமே பார்க்கக்கூடிய சிறப்புப் பாதுகாப்பு அடையாளங்கள் இடம்பெற்றிருக்கும்.
  • பேனா பயன்பாடு: பால்பாயிண்ட் பேனாக்களை (Ballpoint Pen) மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஜெல் பேனாக்கள், இங்க் பேனாக்கள் கொண்டு எழுதப்படும் காசோலைகள் நிராகரிக்கப்படும்.
  • அடித்தல், திருத்தல்கள் தடை: பெயர்கள், தொகை அல்லது தேதியில் சிறு திருத்தங்கள் அல்லது அடித்தல்கள் காணப்பட்டாலும் அத்தகைய காசோலைகள் செல்லாததாகக் கருதப்படும்.

பொதுமக்கள் தங்கள் வங்கிக் கிளைகளை அணுகி பழைய காசோலை புத்தகங்களை ஒப்படைத்துவிட்டு புதிய பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட காசோலை புத்தகங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.