November 8, 2026
WhatsApp Image 2026-11-08 at 8.07.17 PM

சூரத்: குஜராத் மாநிலம் சூரத்தில் ஜவுளி நிறுவனம் நடத்தி வரும் ராஜஸ்தானைச் சேர்ந்த தொழிலதிபர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டுத் தன்னிடம் பணியாற்றும் 50 தொழிலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சத்தைப் போனஸாக வழங்கி ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் பிகானீரைச் சேர்ந்த தொழிலதிபர் ராம்ஸ்வரூப் முண்டே, சூரத்தில் ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் பெரும்பான்மையாகப் பெண் தொழிலாளர்களே பணியாற்றி வருகின்றனர். இவர்களது அயராத உழைப்பைப் பாராட்டும் விதமாக, வெள்ளித் தட்டில் ரூபாய் நோட்டுகளை அடுக்கி வைத்து ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1 லட்சம் ரொக்கப் போனஸை வழங்கினார்.

எதிர்பாராத இந்த அன்பான பரிசால் நெகிழ்ந்துபோன பெண் ஊழியர்கள், முதலாளிக்குக் கண்ணீர்மல்க நன்றி தெரிவித்துக் கட்டியணைத்த நெகிழ்ச்சியான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளையும் குவித்து வருகிறது.