October 22, 2026
காவல் நிலைய மாதாந்திர நிதி ரூ.50,000 ஆக அதிகரிப்பு

காவல் நிலைய மாதாந்திர நிதி ரூ.50,000 ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் உள்ள இலகுவகை, மிதவகை மற்றும் உயர்வகை காவல் நிலையங்களுக்கான மாதாந்திர அவசர கால நிதியை ரூ.30,000 முதல் ரூ.50,000 வரை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை, அக். 21: தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களின் அன்றாட மற்றும் அவசர காலச் செலவினங்களுக்கான மாதாந்திர நிதியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

  • இலகுவகை காவல் நிலையங்களுக்கான மாதாந்திர அவசர கால நிதி ரூ.3,750-ல் இருந்து ரூ.30,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  • மிதவகை காவல் நிலையங்களுக்கான மாதாந்திர நிதி ரூ.6,000-ல் இருந்து ரூ.40,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  • உயர்வகை காவல் நிலையங்களுக்கான மாதாந்திர நிதி ரூ.8,250-லிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *