October 22, 2026
competetive exam
கிராம நிர்வாக அலுவலர் உட்பட 6,574 குரூப் 4 பணியிடங்களுக்கு இதுவரை 3.38 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். நவம்பர் 5 கடைசி நாள் ஆகும். தேர்வு ஜனவரி 10-ல் நடைபெறுகிறது.

சென்னை, அக். 22: தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள குரூப்-4 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அறிவித்துள்ளது.

தற்போது கிராம நிர்வாக அலுவலர் (VAO), இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட குரூப்-4 பிரிவில் மொத்தம் 6,574 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இத்தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 10-ம் தேதி மாநிலம் முழுவதும் நடைபெற உள்ளது.

இத்தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வரும் நவம்பர் 5-ம் தேதி கடைசி நாள் ஆகும். இதுவரை 3.38 லட்சம் பேர் விண்ணப்பங்களைப் பதிவு செய்துள்ளனர். கடைசி நாட்களில் லட்சக்கணக்கானோர் டிஎன்பிஎஸ்சி இணையதளம் (tnpsc.gov.in) வாயிலாக விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், சர்வர் நெரிசலைத் தவிர்க்க விண்ணப்பதாரர்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்குமாறு தேர்வாணையம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *