October 22, 2026
college admission
நாடு முழுவதும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள 837 எம்பிபிஎஸ் இடங்களில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மட்டுமே 824 இடங்கள் உள்ளன. ஆண்டுக் கட்டணம் ரூ.35 லட்சமாக இருப்பதுதான் காரணம் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை, அக். 22: நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய மற்றும் மாநில அளவிலான மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த சூழலில், நாடு முழுவதும் உள்ள நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் (Deemed Universities) 837 எம்பிபிஎஸ் இடங்கள் இன்னமும் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இதில் அதிர்ச்சியளிக்கும் விதமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பல்கலைக்கழகங்களில் மட்டுமே 824 இடங்கள் நிரம்பாமல் உள்ளன.

இதற்கான காரணம் குறித்துக் கல்வியாளர்கள் கூறுகையில், “தமிழக நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் ஓராண்டு எம்பிபிஎஸ் படிப்பிற்கு ரூ.35 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதர மாநிலங்களில் சராசரியாக ஆண்டுக் கட்டணம் ரூ.23 லட்சமாக உள்ள நிலையில், தமிழகத்தில் மிக அதிகக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்து மாணவர்கள் சேர முடிவதில்லை. கல்விக்கட்டணத்தை முறைப்படுத்தி குறைத்தால் மட்டுமே இந்த 824 மருத்துவ இடங்களும் நிரம்பும்” என்று யோசனை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *