October 22, 2026
WhatsApp Image 2026-10-22 at 12.20.27 AM

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் 2 வசூலில் சாதனை படைத்து வருகிறது.
இந்த திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் 4 நடிகைகளின் அதிரடி சண்டை ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து உள்ளது.

ரஜினியுடன் ஆஷா ரோகா


இதில் ஒருவர் அபெக்சா போர்வல். இவர் கடந்த 2009-ம் ஆண்டில் மிஸ் டீன் இண்டியா இன்டர்நேஷனல் அழகி பட்டத்தை வென்றவர் ஆவார். பல்வேறு அழகில் போட்டிகளில் பங்கேற்று உள்ளார். தற்போது பாலிவுட் திரையுலகில் ஆழமாக கால் பதிக்க தீவிரமாக முயன்று வருகிறார்.

பானி ஜே


மற்றொரு நடிகை எடின் ரோஸ். இவர் பல்வேறு வெப் சீரிஸ்களில் நடித்துள்ளார். தெலுங்கு திரைப்படத்தில் ரவிதேஜாவின் ராவணசூரா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார்.மூன்றாவது நடிகை பானி ஜே. இவர் பிட்னஸ் மாடல் ஆவார். பிக் பாஸ் 10, எம்டிபி ரோடிஸ் 4 உள்ளிட்ட பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று உள்ளார். தமிழில் அஜித் குமார் நடித்த வலிமை படத்தில் சாரா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

எடின் ரோஸ்


நான்காவது நடிகை ஆஷா ரோகா. இவர் தற்காப்பு கலை நிபுணர் ஆவார். கடந்த 2013-ல் பல்கேரியாவில் நடைபெற்ற வோர்ல்டு சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றுள்ளார். நேபாளி வம்சாவளியை சேர்ந்த இவர் பாக்சிங் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ளார்.

அபெக்சா போர்வல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *