October 21, 2026
People in Water
கடற்கரையில் இளம் தம்பதியர் செல்போனில் ரீல்ஸ் எடுத்தபடி சென்றபோது, கடல் நீரில் தத்தளித்த சின்னஞ்சிறு குழந்தையை அங்கிருந்தவர் ஓடோடிச் சென்று காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.

சென்னை, அக். 21: சமூக வலைதளத்தில் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று வைரலாகப் பரவி வருகிறது.

கடற்கரையில் இளம் தம்பதியர் செல்போனில் ‘ரீல்ஸ்’ (Reels) வீடியோ எடுத்தபடி நடந்து செல்கின்றனர். அப்போது அவர்களின் சின்னஞ்சிறு குழந்தையைத் தண்ணீரில் தத்தளிக்கவிட்டு இருவரும் ரீல்ஸ் மோகத்தில் மூழ்கிவிட்டனர்.

கடல்நீரில் குழந்தை தத்தளிப்பதைப் பார்த்த அங்கிருந்த ஒருவர் ஓடோடி வந்து குழந்தையைத் தூக்கிக் காப்பாற்றினார். இளம் தம்பதியின் இந்த ரீல்ஸ் மோகத்தை சமூக வலைதளவாசிகள் மிகக் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *