November 8, 2026
WhatsApp Image 2026-11-08 at 10.20.15 PM

மும்பை: இந்திய சினிமா வரலாற்றிலேயே அதிகபட்சமாக சுமார் ரூ.4,000 கோடி பிரம்மாண்ட பட்ஜெட்டில் ஹாலிவுட் தரத்தில் உருவான ‘ராமாயணா: பாகம் 1’ திரைப்படம் வெளியான முதல் 3 நாட்களில் உலகளவில் ரூ.375 கோடியை மட்டுமே வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரைம் போக்கஸ் ஸ்டூடியோஸ் சார்பில் நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில், நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஸ்ரீராமராக ரன்பீர் கபூரும், சீதா பிராட்டியாக சாய் பல்லவியும், ராவணனாக ‘கே.ஜி.எஃப்’ புகழ் யாஷும் நடித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியான இப்படம் லாபகட்டத்தை எட்ட வேண்டுமெனில் உலகளவில் குறைந்தது ரூ.5,000 கோடிக்கு மேல் வசூலிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. முதல் வார இறுதியில் வசூல் சற்று மந்தமாக உள்ள நிலையில், வரவிருக்கும் நாட்களில் வசூல் வேகம் எடுக்குமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.