
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி திரைப்படத்தில் கன்னட நடிகை ரக்சிதா ராம் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
கன்னட திரையுலகில் இவர் லேடி சூப்பர் என்று அழைக்கப்படுகிறார். கன்னட சினிமாவின் முன்னணி நடிகர்களான சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார், உபேந்திரா உள்பட பலருடன் இணைந்து நடித்துள்ளார். இவரது தங்கை நித்யா ராம் தமிழில் பிரபல சீரியல் நடிகையாக உள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு கர்நாடகாவின் தும்கூரில் நடைபெற்ற தசரா விழாவில் ரக்சிதா ராம் பங்கேற்றார். அப்போது ரசிகர்கள் பலரும் அவரோடு இணைந்து செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
ஒரு தீவிர ரசிகர், ரக்சிதாவின் கழுத்தை பிடித்து தனது அருகே இழுத்து செல்பி புகைப்படம் எடுத்தார். இதில் ரக்சிதா நிலைதடுமாறினார். உடனடியாக சுதாரித்த போலீஸ்காரரும், பாதுகாவலரும் அந்த ரசிகரை குண்டுகட்டாக வெளியேற்றினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.







