காபூல், அக். 21: ஆப்கானிஸ்தானின் உருஸ்கான் (Uruzgan) பகுதியை சேர்ந்தவர் முகமது சாதிக் (வயது 57). இவர் அடுத்தடுத்து 4 பெண்களை திருமணம் செய்தார். நான்கு மனைவிகள் மூலம் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றெடுத்தார். இதில் 58 பிள்ளைகள் மட்டுமே தற்போது உயிருடன் உள்ளன.
உள்ளூரில் உள்ள கார் விற்பனையகத்தில் முகமது சாதிக் பணியாற்றி வருகிறார். இதன்மூலம் அவருக்கு மிகக் குறைவான ஊதியம் மட்டுமே கிடைக்கிறது.
நான்கு மனைவிகள், 58 குழந்தைகளுடன் மண் வீட்டில் முகமது வசித்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
“எனக்கு 58 பிள்ளைகள் உள்ளனர். அவர்களில் பலரின் பெயர்கள் எனது நினைவில் இல்லை. பெண் பிள்ளைகள் என்றால் மகளே என்றும், ஆண் பிள்ளைகள் என்றால் மகனே என்றும் அழைப்பேன். அளவுக்கு அதிகமாக குழந்தைகளை பெற்றெடுத்ததால் அவர்களுக்கு போதிய உணவு, உடைகளை வழங்க முடியவில்லை. எனது வருமானம் மிகவும் குறைவாக இருக்கிறது. வயது வந்த பிள்ளைகள் வேலைக்குச் செல்கிறார்கள். அவர்களின் வருமானத்தால் குடும்ப செலவுகளை ஓரளவுக்கு ஈடுகட்ட முடிகிறது.”
இவ்வாறு முகமது தெரிவித்துள்ளார்.
