October 22, 2026
fire fighters
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் மீட்புப் பணிக்கு தயார் நிலையில் 980 தீயணைப்பு வீரர்கள் 15 இடங்களில் முகாமிட்டுள்ளனர் என்று டிஜிபி வெங்கடரமணன் தெரிவித்துள்ளார்.

சென்னை, அக். 22: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது.

பருவமழையை முன்னிட்டு சென்னையில் வெள்ளம் மற்றும் மழை பாதிப்புகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கவும், மீட்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும் தயார் நிலையில் 980 தீயணைப்பு வீரர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். சென்னையின் முக்கிய 15 இடங்களில் சிறப்பு மீட்புக் குழுவினர் முகாமிட்டுள்ளனர்.

அவசர உதவி தேவைப்படும் இடங்களுக்கு 10 நிமிடங்களுக்குள் தீயணைப்பு வீரர்கள் விரைந்து செல்வார்கள் என்று தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை டிஜிபி வெங்கடரமணன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *