
தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார் வாங்க ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர்களுக்கு தலா ரூ.26 லட்சத்திலும், எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.15 லட்சத்திலும் கார்கள் வாங்கப்பட உள்ளன.
சென்னை, அக். 22: தொகுதிப் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்ளும் வகையில் தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு (எம்எல்ஏ) அரசு சார்பில் புதிய கார் வாங்கித் தரப்படும் என்று சட்டமன்றப் பேரவையில் அண்மையில் அறிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக வாகன உற்பத்தி நிறுவனங்களின் பல்வேறு மாடல் கார்கள் அரசின் பரிசீலனையில் இருந்து வந்தன. இந்த நிலையில், தமிழக எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களுக்கு புதிய கார்கள் வாங்குவதற்காகத் தமிழக அரசு சார்பில் ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, அமைச்சர்களுக்குத் தலா ரூ.26 லட்சம் மதிப்பீட்டிலும், சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தலா ரூ.15 லட்சம் மதிப்பீட்டிலும் புதிய வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட உள்ளன.






