October 22, 2026
educa
தமிழக உயர் கல்வித் துறையில் உள்ள 9,000 காலிப் பணியிடங்கள் 2027-2028-க்குள் நிரப்பப்படும் என்றும், தேர்ச்சி பெற்ற 2,700 உதவிப் பேராசிரியர்கள் நவம்பருக்குள் பணியில் சேர்க்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

கூடலூர், அக். 22: தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் கூடலூரில் புதன்கிழமை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

“தமிழக உயர் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் மொத்தம் 9,000 காலிப் பணியிடங்கள் உள்ளன. வரும் 2027–2028-ம் ஆண்டிற்குள் இந்தக் காலிப் பணியிடங்கள் அனைத்தும் தகுதியானவர்களைக் கொண்டு முழுமையாக நிரப்பப்படும்.

முதற்கட்டமாக அரசு கல்லூரிகளில் உள்ள உதவிப் பேராசிரியர் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. உதவிப் பேராசிரியர்களுக்கான எழுத்துத் தேர்வை 42,000 பேர் எழுதினர். இதில் 2,700 பேர் தகுதி பெற்றுள்ளனர். வரும் நவம்பர் மாதத்திற்குள் இவர்கள் அனைவரும் அரசு கல்லூரிகளில் பணியில் சேர்க்கப்படுவார்கள். மீதமுள்ள காலிப் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் வெளிப்படையாக நிரப்பப்படும்.”

இவ்வாறு அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *