October 22, 2026
zoo
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் நீர்வாழ் பறவைகளுக்கு எச்5என்1 (H5N1) பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அக்டோபர் 22, 23 ஆகிய இரு நாட்கள் பூங்கா மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, அக். 22: சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வருகை தருகின்றனர். விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் மக்கள் கூட்டம் அலைமோதும்.

இந்த நிலையில், வண்டலூர் பூங்காவில் உள்ள நீர்வாழ் பறவைகளுக்கு எச்5என்1 (H5N1) என்ற தீவிரப் பறவைக் காய்ச்சல் வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரஸ் காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவக்கூடிய அபாயம் கொண்டது.

பார்வையாளர்களின் பாதுகாப்பு மற்றும் நோய் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வண்டலூர் உயிரியல் பூங்கா அக்டோபர் 22 மற்றும் 23 ஆகிய இரு நாட்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் பறவைகள் வசிக்கும் கூண்டுகள் மற்றும் நீர்நிலைப் பகுதிகள் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு முழுமையாகத் தூய்மைப்படுத்தப்படும் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *