ஸ்டேட் வங்கியின் 3.75 லட்சம் தரவுகள் திருட்டு
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) மீது இணையவழி தாக்குதல் நடத்திய ஹேக்கர் குழு, 3.75 லட்சம் தரவுகளை திருடி டார்க் வெப்சைட்டில் வெளியிட்டுள்ளது. இதில் 3,897 வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக எஸ்பிஐ விளக்கம் அளித்துள்ளது.
மும்பை / புதுடெல்லி, அக். 21: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) மீது இணையவழி தாக்குதல் நடத்திய ஹேக்கர் குழு, 3.75 லட்சம் தரவுகளை திருடி உள்ளது. இந்த தரவுகள் டார்க் வெப்சைட்டில் (Dark Web) வெளியிடப்பட்டு உள்ளன.
இதுதொடர்பாக எஸ்பிஐ நிர்வாகம் தேசிய பங்குச் சந்தையிடம் (NSE) விளக்கம் அளித்துள்ளது.
டார்க் வெப்சைட்டில் வெளியான எஸ்பிஐ தொடர்பான 3.75 லட்சம் தரவுகளை பகுப்பாய்வு செய்தபோது, 3,897 வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் கண்டறியப்பட்டன. சைபர் தடுப்பு நெறிமுறைகளை வங்கி நிர்வாகம் செயல்படுத்தி உள்ளது. “சூழ்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். தேவைக்கேற்ப அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்” என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
