October 22, 2026
shop
தமிழகத்தில் அரிசி விலை உயர்வைத் தடுக்க கூட்டுறவு அங்காடிகளில் 25,000 டன் சன்ன ரக அரிசி கிலோ ரூ.30-க்கு விற்பனைக்கு வழங்கப்பட்டுள்ளது. அரிசி விலை விரைவில் குறையும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சென்னை, அக். 22: வெளிச்சந்தையில் அரிசி விலை உயர்ந்து வருவதைத் தொடர்ந்து, சாமானிய மக்களைப் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வகையில் கூட்டுறவுத் துறை அங்காடிகளில் குறைந்த விலையில் அரிசி விற்பனை விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் கூறியதாவது:

“பொதுமக்களின் சுமையைக் குறைக்க கூட்டுறவுத் துறை அங்காடிகள் மூலம் 2-வது முறையாக 25,000 மெட்ரிக் டன் சன்ன ரக அரிசி விற்பனைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நியாயவிலைக் கூட்டுறவு அங்காடிகளில் ஒரு கிலோ அரிசி வெறும் ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட இதர அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைக்கவும் துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தமிழகத்தில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை விரைவில் கணிசமாகக் குறையும்.”

இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *