October 22, 2026
road
பருவமழையால் சேதமடைந்த சென்னையின் 15 மண்டல சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க ரூ.21.80 கோடியை சென்னை மாநகராட்சி ஒதுக்கீடு செய்து பணிகளைத் தொடங்கியுள்ளது.

சென்னை, அக். 22: வடகிழக்குப் பருவமழை காரணமாக சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் உள்ள முக்கிய சாலைகள் சேதமடைந்துள்ளன. பெரும்பாலான சாலைகளில் ஆங்காங்கே ராட்சத பள்ளங்கள் உருவாகியுள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் சாலைகளைச் சீரமைக்கும் பணியைப் பெருநகர சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. மாநகராட்சிப் பகுதிகளில் பேருந்துகள் செல்லும் சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்கள் கான்கிரீட் கலவை மற்றும் தார் கலவை மூலம் உடனடியாகச் சீரமைக்கப்பட்டு வருகின்றன. இதற்காக ரூ.9.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், சென்னையின் பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் உள்ள உட்புறச் சாலைகளைச் சீரமைப்பதற்காக ரூ.12.55 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக ரூ.21.80 கோடி மதிப்பீட்டில் நகரின் அனைத்து மண்டலங்களிலும் சாலை சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *