
ஹாலிவுட் டெர்மினேட்டர் திரைப்பட பாணியில் காரைத் தூக்குவதுடன் ஒரே அடியில் அடித்து நொறுக்கும் அதிநவீன மனித உருவ ரோபோவை சீனாவின் யுனிடிரி நிறுவனம் தயாரித்துள்ளது.
ஹாலிவுட் நடிகர் அர்னால்டு நடிப்பில் பல பாகங்களாக வெளிவந்த டெர்மினேட்டர் திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்த திரைப்படங்களில் அர்னால்டு, இயந்திர மனிதராக நடித்திருப்பார்.
இதே பாணியில் சீனாவின் யுனிடிரி நிறுவனம் மனித ரோபோவை தயாரித்து இருக்கிறது. இந்த ரோபோ துள்ளிக் குதித்து பாய்கிறது. உயரமான கன்டெய்னரில் இருந்து குதிக்கிறது. பல டன் எடை கொண்ட காரை கைகளால் தூக்குகிறது. திருடனை அடித்து விரட்டுகிறது.
ஓங்கி அடித்தால் ஒன்றரை டன் வெயிட் என்ற பாணியில் ஒரே அடியில் காரை துவம்சம் செய்கிறது. இந்த ரோபோ, ரியல் டெர்மினேட்டர் என்று சமூகவலைவாசிகள் வர்ணிக்கின்றனர்.
ராணுவம் மற்றும் காவல் பணிக்காக இத்தகைய மனித ரோபோக்களை தயாரிக்கப்படுவதாக சீன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.






